செய்திகள்
தேங்கி நிற்கும் மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

நிவர் புயல்- வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவு

Published On 2020-11-25 05:50 GMT   |   Update On 2020-11-25 05:50 GMT
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை:

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் பெய்துள்ள மழை அளவு குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அதிகபட்சமாக வடசென்னையில் 16 செ.மீ. மழை பதிவானது.

அண்ணா பல்கலை., விமான நிலையம், சோழிங்க நல்லூர் பகுதியில் தலா 15 செ.மீ. மழை பதிவானது.

மாமல்லபுரம், ஆலந்தூர், புழல், செம்பரம்பாக்கம் பகுதியில் தலா 12 செ.மீ., மழை பதிவானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News