ஆட்டோமொபைல்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்

இந்தியாவில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்

Published On 2019-09-25 08:01 GMT   |   Update On 2019-09-25 08:01 GMT
அவான் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்களை 2019 புனே மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது.



அவான் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 2019 புனே மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது. இரு ஸ்கூட்டர்களில் டாப் எண்ட் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிளாக்‌ஷிப் ஸ்கூட்டரில் 72 வாட் 22ஏ.ஹெச். லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 1200 வாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கூட்டர் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதன் குறைந்த திறன் கொண்ட மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் செல்லும்.

என்ட்ரி லெவல் ஸ்கூட்டர் 60 வாட் 35 ஏ.ஹெச். லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 800 வாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இரு ஸ்கூட்டர்களின் முன்புறம் டிஸ்க் பிரேக் பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.



அவான் மோட்டார்ஸ் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இ.வி. ஸ்டார்ட் அப் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை குறைந்த விலையில் உருவாக்கி வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தற்சமயம் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது.

இவை சீரோ, சீரோ பிளஸ் மற்றும் டிரெண்ட்இ என அழைக்கப்படுகின்றன. மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் காயில் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News