செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் முழு ஊரடங்கில் 273 வாகனங்கள் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை

Published On 2021-05-03 19:55 GMT   |   Update On 2021-05-03 19:55 GMT
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்றுமுன்தினம் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளின்றி, சாலைகளில் வாகனங்களில் வலம் வருவோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சென்னையில் முழு ஊரடங்கான நேற்று முன்தினம் கட்டுப்பாடுகளை மீறி சாலைகளில் வலம் வந்த 218 மோட்டார் சைக்கிள்கள், 24 ஆட்டோக்கள், 21 கார்கள், 10 கனரக வாகனங்கள் என 273 வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் முககவசம் அணியாத குற்றத்துக்காக இதுவரையில் 25 ஆயிரத்து 251 பேர்களிடம் அபராத தொகையாக ரூ.47 லட்சத்து 52 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 413 பேர்களிடம் அபராத தொகையாக ரூ.2,01,100-ம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News