கதம்பம்
கோள்கள்

கோள்களில் இருந்து கிடைக்கும் சக்தி

Published On 2022-01-07 12:31 GMT   |   Update On 2022-01-07 12:31 GMT
பூமியில் இருந்து கிடைக்கும் சக்தியை பெற நாம் செருப்பு அணியாமல் வெறுங்காலால் நடக்க வேண்டும்.
நமக்கு வரக்கூடிய உயிர்ச்சக்தி தினம்தோறும் செலவாகிக் கொண்டே இருக்கிறது. வந்து கொண்டேயும் இருக்கிறது. அது உணவிலே இருந்து ஒரு பகுதி, காற்றில் இருந்து இன்னொரு பகுதி, கோள்களில் இருந்து ஒரு பகுதி, பூமியிலிருந்து ஒரு பகுதி  என நான்கு வகையிலே நமக்கு சக்தி கிடைக்கிறது.

உணவை மாத்திரம் எப்போதும் வயிற்றில் நிரப்பி வைத்துவிட்டால் மற்ற வகையில் இருந்து வரும் சக்தி கிடைக்காமல் போய்விடும். அப்படித் தடுத்து விடுவதனால் சில குறைபாடுகள் விளைகின்றன.

சிலருக்கு கால்சியம் சத்து குறைவாகவுள்ளது, இரும்புச் சத்து குறைவாகவுள்ளது என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பலவிதமான உலோகச் சத்துக்கள், இரசாயனங்கள் எல்லாம் உடலுக்குத் தேவை. அவை குறைந்துவிட்டால் நோய் வரும்.

இந்த சத்துகள் கோள்களிலிருந்தும்  கிடைக்கின்றன. நாம் பசியோடு இருந்தால்தான் அந்த சக்தியை நம் உடல் செல்கள் கிரகித்துக் கொள்ளும்.

பூமியில் இருந்து கிடைக்கும் சக்தியை பெற நாம் செருப்பு அணியாமல் வெறுங்காலால் நடக்க வேண்டும். மண்ணில் நேரடி தொடர்பு கொள்ளும்போது அந்த ஆற்றல் நமக்கு கிடைக்கிறது.



தினந்தோறும்  சாப்பாட்டுக்கு முன்னர் ஒரு மணி நேரம் பசியோடு இருந்தால் அந்த நேரத்தில் உணவில் இருந்து ஜீவகாந்த சக்தியை இழுக்க வாய்ப்பு  இல்லாததால்,  உடல் தானாகவே காற்றில் இருந்தும், கோள்களின் அலை வீச்சிலிருந்தும் பூமியில் இருந்தும் சக்தியை கிரகித்துக் கொள்ள முடியும். அப்பொழுதுதான் உடலுக்கும் அறிவுக்கும் ஏற்ற விருந்தாக நல்ல சக்தி நமக்குக் கிடைக்கும். -வேதாத்ரி மகரிஷி 
Tags:    

Similar News