உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ரங்கசாமி ஆட்சி நீடிக்காது: நாராயணசாமி கணிப்பு

Published On 2022-04-17 06:13 GMT   |   Update On 2022-04-17 06:13 GMT
புதுவையில் ரங்கசாமி ஆட்சி நீடிக்காது என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை பொறுப்பு கவர்னர் தமிழிசையை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக தமிழிசை பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் அந்த வேலை முடித்த பின், தற்போதைய முதல்-அமைச்சர் ரங்கசாமியை மிரட்டி கூட்டணி அமைத்-தார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை வருமான வரித்துறை, அமலாக்கம் மற்றும் சி.பி.ஐ.க்களை கொண்டு மிரட்டினர். 

அவர்களை தேர்தலில் நிற்க வைத்து பண பலம் மற்றும் அதிகார பலத்தை வைத்து வெற்றி பெற்று ஆட்சி நடத்துகின்றனர். 

புதுவையில் ஊழலை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. கர்நாடகாவில் பா.ஜனதா மந்திரிகள் 40 சதவீதம் கமிஷன் வாங்குகின்றனர். 

இங்குள்ள அமைச்சர்கள் 30 சதவீதம் கமிஷன் வாங்குகின்றனர். 10 சதவீதம்தான் வித்தியாசம். இந்த ஆட்சி எத்தனை காலம் நீடிக்கும் என்பது தெரிய-வில்லை. 

ரங்கசாமி முதல்-அமைச்சராக நாட்களை எண்ணிக் கொண்டுள்ளார். கவர்னர் தமிழிசை சூப்பர் முதல்வராக இருந்து மாநிலத்தில் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தலையிட்டு வருகிறார். 

ரங்கசாமி டம்மி முதல்வர். மத்திய பா.ஜனதா அரசு, புதுவைக்கு நிரந்தர கவர்னரை நியமிக்க வேண்டும். கவர்னர் தமிழிசையை திரும்ப பெற வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News