தொழில்நுட்பம்

இந்தியாவில் சியோமியின் போகோ ஸ்மார்ட்போன் விலை ரூ.2000 குறைப்பு

Published On 2019-03-21 06:24 GMT   |   Update On 2019-03-21 06:24 GMT
சியோமியின் போகோ பிராண்டு எஃப்1 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.2000 குறைக்கப்படுகிறது. #PocoF1



சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் விலை நிரந்தரமாக குறைக்கப்படுகிறது. அதன்படி போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை குறுகிய காலத்திற்கு குறைக்கப்படுகிறது. அந்த வகையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ.2,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும்.

தற்சமயம் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போகோ அறிவித்திருக்கும் ரூ.2000 தள்ளுபடி மார்ச் 25 ஆம் தேதி முதல் துவங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த தேதிகளில் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை வழக்கமான விலையில் விற்பனை செய்யப்படும். முன்னதாக 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல்கள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 



போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ப்ளிப்கார்ட் மற்றும் Mi வலைதளங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. சிறப்பு விற்பனையின் போது போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமியின் துணை பிராண்டு போகோ இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.23,999 விலையில் அறிவிக்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீல் புளு, கிராஃபைட் பிளாக், ரோஸோ ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News