செய்திகள்
காயல்பட்டினத்தில் உள்ள ஒரு வீட்டில் முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை நடத்தியபோது எடுத்த படம்.

காயல்பட்டினத்தில் வீடுகளில் ரம்ஜான் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்

Published On 2021-05-14 23:36 GMT   |   Update On 2021-05-14 23:36 GMT
காயல்பட்டினத்தில் வீடுகளில் முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை நடத்தினர்.
ஆறுமுகநேரி:

தமிழகமெங்கும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் காயல்பட்டினத்தில் அதிகமாக வாழும் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களிலும் மற்றும் காயல்பட்டணம் கடற்கரையிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு கொரோனாவின் தொடக்க காலமாக இருந்ததால் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெறவில்லை.

இந்த ஆண்டாவது கடற்கரையில்‌ தொழுகை நடைபெறும் என்று இஸ்லாமியர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை கடற்கரையில் நடைபெறவில்லை‌. மாறாக அவரவர் இல்லங்களிலேயே உறவினருடன் ரம்ஜான் சிறப்பு தொழுகையை நடத்தினர்.

காயல்பட்டினம் கொச்சியார் தெருவில் ஒரு வீட்டில் அந்த வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களுடன் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.

இந்த தொழுகையினை காயல்பட்டினம் குருவித்துறை பள்ளிவாசல் இமாம் மௌலவி ஜாபர் சாதிக் நடத்தினார். இதில் குறிப்பிட்ட சிலர் சமூக இடை வெளி மற்றும் முக கவசம் அணிந்து இந்த தொழுகையில் கலந்து கொண்டனர்.

தொழுகைக்குப் பின்பு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதுபோல் காயல்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்று தொழுகைகள் அவரவர் இல்லங்களில் சொந்தங்கள், உறவினர்களோடு நடைபெற்றது.
Tags:    

Similar News