செய்திகள்
மம்தா பானர்ஜி

பவானிபூர் இடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி

Published On 2021-09-10 10:12 GMT   |   Update On 2021-09-10 10:12 GMT
பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக வேளாண் மந்திரியும், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சோபன்தேவ் சட்டோபாத்யாய் ராஜினாமா செய்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். முதல்வராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜி, 6 மாதத்திற்குள் மீண்டும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.-வாக வேண்டும்.

முந்தைய தேர்தல்களில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி தொடர்ந்து போட்டியிட்டு வென்றுள்ளார். எனவே, மீண்டும் பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக வேளாண் மந்திரியும், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வுமானவான சோபன்தேவ் சட்டோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானது. 

பவானிபூர் தொதிக்கான இடைத்தேர்தல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், போட்டியிடுவதற்காக மம்தா பானர்ஜி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா திப்ரவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
இதேபோல் ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் தொகுதிகளிலும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 3 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 3ம் தேதி எண்ணப்படுகின்றன.

Tags:    

Similar News