செய்திகள்
2000 ரூபாய் நோட்டுகள்

2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் பதுக்கப்படுகின்றன - முன்னாள் நிதி அமைச்சக செயலாளர் தகவல்

Published On 2019-11-08 08:49 GMT   |   Update On 2019-11-08 08:49 GMT
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கப்படுவதாக முன்னாள் நிதி அமைச்சக செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய நிதி அமைச்சகத்தில் செயலாளராக பணியாற்றிய சுபாஷ் சந்திர கார்க் கடந்த ஜூலை மாதம் மின்சாரத்துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் தான் விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக கூறி பதவியை ராஜினாமா செய்தார்.

அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் தன்னை இடமாற்றம் செய்ததாகவும் அதிருப்தி அடைந்த சுபாஷ் சந்திர கார்க் தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கப்படுவதாக சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

3 ஆண்டுக்கு முன்பு 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிட்டது. மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டன.



தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பதுக்கப்பட்டு விட்டன. அதனால் அந்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருவதில்லை. இதனால் இந்திய பொருளாதாரத்தில் பண பரிமாற்றத்துக்கான செயல்பாட்டில் 2000 ரூபாய் நோட்டுக்கள் இல்லை.

இந்தியாவின் மொத்த பணப்புழக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் (மதிப்பு அடிப்படையில்) மூன்றில் ஒரு பங்கு உள்ளது.

ஆனால் அவைகளின் புழக்கம் குறைந்து உள்ளது. எனவே 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியே கொண்டுவர எந்த இடையூறும் இல்லாமல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அதற்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்தாலே போதும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை கொடுக்கும் பழக்கம் வேண்டாம்.

2000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வைத்துவிட்டு ஏ.டி.எம்.-ல் 500 ரூபாய், மற்ற ரூபாய் நோட்டுக்களை கொடுக்கலாம் என்று கூறி உள்ளார்.

சுபாஷ் சந்திர கார்க், இந்தியாவை 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக எப்படி வளர்க்க வேண்டும். அதற்கு என்ன மாதிரியான 100 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது இணைய தள பக்கத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் 2000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுபாஷ் சந்திர கார்க் 2014-ம் ஆண்டு மத்திய அரசு பணிக்கு கொண்டு வரப்பட்டார். 2017-ம் ஆண்டு வரை உலக வங்கியில் நிர்வாக இயக்குனராக இருந்தார். 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Tags:    

Similar News