தொழில்நுட்பச் செய்திகள்
மோட்டோ எட்ஜ் எக்ஸ்30

விற்பனைக்கு முன் விற்றுத்தீர்ந்த மோட்டோ ஸ்மார்ட்போன்

Published On 2021-12-11 07:20 GMT   |   Update On 2021-12-11 07:20 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.


மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

அறிமுகம் செய்யப்பட்டதும், ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு சீன சந்தையில் துவங்கியது. இந்த நிலையில், மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 முன்பதிவு நிறுத்தப்பட்டதாக லெனோவோ மொபைல் வியாபார பிரிவு பொது மேலாளர் சென் ஜின் தெரிவித்துள்ளார். 



ஐந்து இலக்க யூனிட்கள் இதுவரை விற்றுத்தீர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 விற்பனை டிசம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 2999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 35,683 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அம்சங்களை பொருத்தவரை மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 மாடலில் 6.7 இன்ச் பிளெக்சிபில் ஒ.எல்.இ.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 50 எம்.பி. வைடு ஆங்கில் பிரைமரி கேமரா, 50 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா, 60 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News