இந்தியா
கொலை நடைபெற்ற இடம்

காஷ்மீரில் உயிரிழந்த மகனுக்காக நீதி கேட்கும் தந்தை

Published On 2022-05-14 06:31 GMT   |   Update On 2022-05-14 06:31 GMT
இந்த கொலையை கண்டித்து காஷ்மீர் பண்டிதர் சமுகத்தை சேர்ந்தவர்கள் கையில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புது டெல்லி:

ஜம்மு காஷ்மீர் புட்கம் மாவட்டத்தில் உள்ள சதுரா பகுதியில் கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகள் 36 வயதான ராகுல் பாத் என்ற அரசு ஊழியரை அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர். 

இந்த படுகொலைக்கு ஜம்மு காஷ்மீரில் பல கண்டனங்கள் எழுந்த நிலையில், காஷ்மீர் பண்டிதர் சமுகத்தை சேர்ந்தவர்கள் கையில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.   மேலும், அரசு எங்களை பாதுகாக்க தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினர். 

இதுகுறித்து ராகுல் பாத்தின் தந்தை பிதாஜி பாத் கூறுகையில், இரண்டு பேர் துப்பாக்கியுடன் அலுவலகத்திற்குள் சென்று தாக்கியுள்ளனர். இது ஒரு திட்டமிட்ட கொலை.  போலீஸ் நிலையமானது அலுவலகத்தில் இருந்து 20 மீட்டர் தொலைவில் தான் இருக்கிறது.  இருந்தும் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.

இந்த தாக்குதலுக்கு பிறகு மக்கள் மிகவும் கவலையில் உள்ளனர். அப்பகுதியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி உள்ளது.  குறைந்தபட்சம் எங்கள் குழந்தைகளுக்காவது பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
Tags:    

Similar News