செய்திகள்
துரைமுருகன்

5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு சாத்தியமில்லை- துரைமுருகன்

Published On 2019-09-17 04:29 GMT   |   Update On 2019-09-17 04:29 GMT
5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்று கூறுவது சாத்தியமில்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர்:

வேலூர் ஊரிசு கல்லூரியில் தமிழ்மன்ற தொடக்க விழா நடந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் அவர்கள் இந்தி திணிப்பை தான் புகுத்துகிறார்கள். தற்போது இந்தியை திணிப்பது ஒன்றும் புதிதல்ல. இந்தியை எல்லா மாநிலத்தின் மீதும் சட்டம் இயற்றி திணிப்பது என்பது சாத்தியமில்லை. அது பல விளைவுகளை ஏற்படுத்தும். தற்போது மத்தியில் உள்ள அரசு ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே ஆட்சி, ஒரே குடும்ப அட்டை, ஒரே கல்வி என எல்லாவற்றையும் இப்படி புகுத்த நினைக்கிறார்கள். அது முடியாது.

தமிழகத்தில் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்று கூறுவது சாத்தியமில்லை. 5-ம் வகுப்பிலும், 8-ம் வகுப்பிலும் அமைச்சர்கள் பொதுத்தேர்வை எழுதிவிட்டா வந்தார்கள்? இது தேவையில்லாதது.

தமிழக கல்வித்துறை குழப்பத்தில் உள்ளது. அரசு பணத்தில் முதல் அமைச்சர் வெளிநாடு சென்றார். அதனால் நாங்கள் கேள்வி கேட்டோம். அதற்காக சொந்த பணத்தில் வெளிநாடு செல்லும் மு.க.ஸ்டாலினை பார்த்து எப்படி சென்றார்? என கேட்பது எந்த வகையில் நியாயம். நாங்கள் என்ன அரசு பணத்திலா வெளிநாடு சென்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News