செய்திகள்
விபத்து

பழனி அருகே மினி வேன் கவிழ்ந்து 25 பெண்கள் படுகாயம்

Published On 2019-11-15 10:09 GMT   |   Update On 2019-11-15 10:09 GMT
பழனி அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பெண்கள் படுகாயமடைந்தனர்.

பழனி:

பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தல் பகுதியில் இருந்து 25 பெண்களை கூலி வேலைக்காக ஒரு மினி வேனில் ஏற்றிக் கொண்டு கொடியரசு (வயது 23) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இன்று அதிகாலை வேன் குவாரி அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. உடனே வேனுக்குள் இருந்த பெண்கள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர்.

உடனே அவ்வழியே வந்தவர்கள் வேனில் இருந்த பெண்களை வெளியே மீட்டனர். பின்னர் இது குறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

வேன் டிரைவர் கொடியரசு மற்றும் வேனில் வந்த முனியாண்டி மனைவி பசும்பொன் (35), மணிகண்டன் மனைவி பின்னாயி (40), சீத்தா லெட்சுமி, ஜெயக்கொடி, ராமாயி, கம்மாலெட்சுமி, பூவிழி உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பசும்பொன் மற்றும் பின்னாயி உடல் நிலை மிகவும் மோசமடையவே அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிகாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News