தொழில்நுட்பம்
ஏர்டெல்

அதிவேக 5ஜி சேவை வழங்க ஏர்டெல் மற்றும் குவால்காம் கூட்டணி

Published On 2021-02-24 07:54 GMT   |   Update On 2021-02-24 07:54 GMT
இந்தியா முழுக்க அதிவேக 5ஜி சேவை வழங்க ஏர்டெல் மற்றும் குவால்காம் கூட்டணி அமைத்து இருக்கின்றன.


இந்தியாவின் ஐதராபாத் நகரில் பாரதி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை வர்த்தக நெட்வொர்க்கில் வெற்றிகரமாக சோதனை செய்து அசத்தியது. தற்சமயம் இந்தியாவில் 5ஜி சேவையை முழுவீச்சில் வழங்க குவால்காம் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது.

ஏல்டெல் நெட்வொர்க் விற்பனையாளர் மற்றும் சாதனங்களை வழங்கும் ஒப்பந்ததாரர்களை கொண்டு குவால்காம் 5ஜி RAN பிளாட்பார்ம் மூலம் RAN சார்ந்த 5ஜி சேவையை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் O RAN (ரேடியோ அக்சஸ் நெட்வொர்க்) அலையன்ஸ் குழுவின் உறுப்பினர் ஆகும். 



இந்தியாவில் RAN சார்ந்த திட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் O RAN வழிமுறையை அமல்படுத்த ஏர்டெல் திட்டமிடுகிறது. O RAN போன்ற தளம் கொண்டு சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களும் 5ஜி நெட்வொர்க்குகளை செயல்படுத்த வழி செய்ய முடியும்.

இதுதவிர ஏர்டெல் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை பல்விதங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளில் செயல்பட இருக்கின்றன. இத்துடன் அதிவேகமாக பிராட்பேண்ட் சேவைகளை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்க இரு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. 
Tags:    

Similar News