ஆன்மிகம்
கள்ளழகர் வேடம் பூண்ட சுந்தரராஜபெருமாள், மனோரஞ்சித மாலை அலங்காரத்தில் காட்சி தந்தார்.

சித்திரை திருவிழா: பக்தர்கள் யாருமின்றி எளிமையாக நடந்த கள்ளழகர் எதிர்சேவை

Published On 2021-04-27 03:51 GMT   |   Update On 2021-04-27 03:51 GMT
மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் எதிர்சேவை நிகழ்ச்சி பக்தர்கள் யாருமின்றி மிக எளிமையாக கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, கள்ளழகர் வேடம் பூண்ட சுந்தரராஜபெருமாள், மனோரஞ்சித மாலை அலங்காரத்தில் காட்சி தந்தார்.
மதுரை அழகர்கோவிலின் சித்திரை பெருந்திருவிழா கொரோனா காரணமாக கோவிலின் உள்வளாகத்திலே அரசு வழிகாட்டுதல்படி நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று காலையில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான எதிர்சேவை நடைபெற்றது.

வழக்கமாக மதுரை சித்திரை திருவிழா என்றால், கள்ளழகர் மதுரை புறப்பாடு, வழிநெடுகிலும் மண்டபகப்படிகளில் எழுந்தருளல், மூன்று மாவடியில் மதுரை பக்தர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு அழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை, அதற்கு அடுத்த நாள் அதிகாலையில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளல், பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் வைகை ஆற்றில் இறங்குதல் என பக்தர்கள் புடை சூழ அழகர் திருவிழா நடந்தேறும்.

ஆனால், நேற்று எதிர்சேவை நிகழ்ச்சி பக்தர்கள் யாருமின்றி மிக எளிமையாக கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, கள்ளழகர் வேடம் பூண்ட சுந்தரராஜபெருமாள், மனோரஞ்சித மாலை அலங்காரத்தில் காட்சி தந்தார்.

இன்று 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் கோவில் வளாகத்தில் செயற்கையாக உருவாக்கிய வைகை ஆற்றில் இறங்குகிறார்.
Tags:    

Similar News