ஆன்மிகம்
பவானி கூடுதுறை தர்ப்பணம் செய்த பக்தர்கள்(பழைய படம்)

பவானி-கொடுமுடியில் மகாளய அமாவாசைக்கு திதி, தர்ப்பணம் செய்ய தடை

Published On 2020-09-16 05:18 GMT   |   Update On 2020-09-16 05:18 GMT
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை, கொடுமுடி மற்றும் காவிரி, பவானி ஆற்றங்கரைகளில் உள்ள புனித- புண்ணியதலங்களில் பொதுமக்கள் கூடி திதி, தர்பண பூஜைகள் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு :

மகாளய அமாவாசை நாளை (வியாழக்கிழமை) வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மகாளய அமாவாசை தினத்தில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்பணம் செய்து புனித நீராடுவதற்காக பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

தற்போது கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரே இடத்தில் அதிகம்பேர் கூடுவதால் நோய்தொற்று பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை, கொடுமுடி மற்றும் காவிரி, பவானி ஆற்றங்கரைகளில் உள்ள புனித- புண்ணியதலங்களில் பொதுமக்கள் கூடி திதி, தர்பண பூஜைகள் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. குறைந்த அளவு பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News