தொழில்நுட்பம்
மொபைல் சார்ஜர்

2.5 சதவீதம் சுங்க வரி - இந்தியாவில் மொபைல் போன் விலை விரைவில் உயர்வு?

Published On 2021-02-01 09:42 GMT   |   Update On 2021-02-01 09:42 GMT
இந்தியாவில் சில மொபைல் போன் பாகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு நீக்கப்பட்டு இருக்கிறது.


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொழில்நுட்பம் மற்றும் மின்சாதன கேட்ஜெட்கள் பிரிவில் பெரிய அறிவிப்பாக மொபைல் சார்ஜர் மற்றும் சில மொபைல் போன் பாகங்களுக்கான சுங்க வரி உயர்வு இருக்கிறது.

மொபைல் போன்களுக்கு தேவைப்படும் சில பாகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு தற்சமயம் சுங்க வரி 2.5 சதவீதமாக மாற்றப்படுகிறது என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 



“ஸ்மார்ட்போன்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சார்ஜர் மற்றும் மொபைல் போன் பாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. தற்சமயம் உலகிற்கு நாம் மொபைல் மற்றும் சார்ஜர்களை ஏற்றுமதி செய்கிறோம்.” 

“உள்நாட்டு உற்பத்தி பெருமளவு அதிகரித்து இருக்கிறது. தற்சமயம் மொபைல் மற்றும் சார்ஜர்களை ஏற்றுமதி செய்கிறோம். உள்நாட்டு மதிப்பு கூட்டல் காரணமாக சில பாகங்களுக்கான வரிவிலக்கை ரத்து செய்து 2.5 சதவீதம் வரி வசூலிக்கப்பட இருக்கிறது.”என அவர் தெரிவித்தார்.

வரி மாற்றம் காரணமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை தற்சமயம் இருப்பதை விட மேலும் அதிகமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News