செய்திகள்
கோப்புப்படம்

செயலிகளுக்கு தடை : இந்தியாவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு

Published On 2020-11-26 00:04 GMT   |   Update On 2020-11-26 00:55 GMT
43 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட இந்தியாவின் முடிவுக்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
பீஜிங்:

இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், கடந்த ஜூன் 29-ந் தேதி 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. செப்டம்பர் 2-ந் தேதி மேலும் 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம், மேலும் 43 சீன செயலிகளை தடை செய்து உத்தரவிடப்பட்டது. தேச பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து நேற்று கருத்து கூறிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஸாவ் லிஜியான், ‘இந்தியாவின் இந்த நடவடிக்கை, சந்தை கொள்கைகளுக்கும், உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளுக்கும் எதிரானது. சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகளையும், நலன்களையும் பாதிப்பதாக உள்ளது. இதை சீனா உறுதியாக எதிர்க்கிறது.

இந்தியா உடனடியாக தனது பாகுபாடான செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் பாதிப்பு அடையாமல் தவிர்க்க வேண்டும்’ என்றார்.
Tags:    

Similar News