செய்திகள்
பிரதமர் மோடி

7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

Published On 2021-10-15 11:14 GMT   |   Update On 2021-10-15 14:37 GMT
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்பு நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
புதுடெல்லி:

நாட்டின் ராணுவ தளவாடங்களில் தற்சார்பை மேம்படுத்தும் வகையில், ஆயுத தொழிற்சாலை வாரியமானது 7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டன. இந்த 7 பாதுகாப்பு நிறுவனங்களையும் தசரா பண்டிகை நாளான இன்று பிரதமர் மோடி காணொலி துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி அஜய் பட் மற்றும் பாதுகாப்பு தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

எதிர்கால தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க வேண்டும், ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, இந்த 7 நிறுவனங்களுடன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Tags:    

Similar News