ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு கட்டணம் உயர்வு

Published On 2019-09-13 04:16 GMT   |   Update On 2019-09-13 04:16 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு கட்டண உயர்வு வருகிற 20-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.

கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறந்து இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு பல வகையான வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கோவிலில் வழிபாடு கட்டணங்களாக அபிஷேகத்திற்கு ரூ.250, சந்தன காப்பு ரூ.100, கன்னியாபோஜனம் ரூ.150, புடவை சார்த்து ரூ.10, அரவணை ரூ.75, பால் பாயாசம் ரூ.50, பொங்கல் ரூ.25, சோறு கொடுப்பு ரூ.20, அஷ்டோத்திரம் ரூ.5, மாதாந்திர அர்ச்சனை ரூ.15 வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி முதல் வழிபாடு கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. புதிய கட்டணமாக அபிஷேகத்திற்கு ரூ.500, அஷ்டாபிஷேகத்திற்கு ரூ.1,500, சந்தன காப்பு ரூ.200, கன்னியாபோஜனம் ரூ.500, புடவை சார்த்து ரூ.50, அரவணை ரூ.200, பால் பாயாசம் ரூ.100, பொங்கல் ரூ.100, சோறு கொடுப்பு ரூ.50, அஷ்டோத்திரம் ரூ.10, மாதாந்திர அர்ச்சனை ரூ.25 என வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் கட்டண உயர்வு 20-ந்தேதி அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 20-ந் தேதிக்குள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News