ஆன்மிகம்
மாகாளியம்மன்

செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா வருகிற 9-ந்தேதி நடக்கிறது

Published On 2021-03-09 09:28 GMT   |   Update On 2021-03-09 09:28 GMT
நெகமம் அடுத்த செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா தொடங்கியது.ஊரின் முக்கிய வீதிகள் வழியாக நோன்பு சாட்டுதல் அறிவிக்கப்பட்டது.
நெகமம் அடுத்த செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டு பூச்சாட்டுதல் விழா தொடங்கியது. முன்னதாக ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, உருமி மேளத்துடன் கோவிலை மூன்று முறை வலம் வந்து, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக நோன்பு சாட்டுதல் அறிவிக்கப்பட்டது.

வருகிற 9-ந் தேதி மாலை 4 மணிக்கு மாகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு குடிகிணறு சென்று அங்குள்ள விநாயகர் கோவிலில் சக்தி கலசம் முத்தரித்து, சிறப்பு பூஜைகள் செய்து பூவோடு எடுத்து வருதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். 10-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு பெருமாள் கோவிலில் இருந்து சீர் வரிசை எடுத்து வருதல், கும்ப தீர்த்தம் விடுதல், 4 மணிக்கு கோவில் வளாகத்தில் அம்மனுக்கு திருக்கல்யாணம், 6 மணிக்கு மா விளக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது.

12-ந்தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல், சாமி திருவீதி உலா, 12 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, மாலை 2 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், பெண்கள் கும்மியடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News