விளையாட்டு
85 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் அரைசதம் - தென் ஆப்பிரிக்காவுக்கு 288 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2022-01-21 12:31 GMT   |   Update On 2022-01-21 12:31 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.
பார்ல்:

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ஷிகர் தவான் இறங்கினர்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த ஜோடி அடித்து ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவான் 29 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

தொடர்ந்து இறங்கிய ரிஷப் பண்ட் தொடக்கம் முதல் அதிரடியாக ஆடினார். அவருக்கு கே.எல்.ராகுல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ரன் ரேட்டும் உயர்ந்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 55 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 71 பந்தில் 2 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரன்னிலும், வெங்கடேஷ் அய்யர் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்துள்ளது. ஷர்துல் தாக்கூர் 44 ரன்னுடனும், அஷ்வின் 25 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து, ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News