தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஆப்பிள் இந்தியா வருவாய் இருமடங்கு உயர்வு

Published On 2021-01-28 07:57 GMT   |   Update On 2021-01-28 07:57 GMT
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வியாபாரங்கள் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கின்றன.

டிசம்பர் 26 ஆம் தேதி வரையிலான காலாண்டு வாக்கில் இந்திய வியாபாரத்தில் ஆப்பிள் நிறுவனம் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்த தகவலை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.

இத்துடன் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவன வருவாய் இதுவரை இல்லாத அளவு அதிகரித்து ரூ. 8,14,270 கோடியாக உள்ளது. இது சர்வதேச அளவில் முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் அதிகம் ஆகும். இந்த வளர்ச்சிக்கு ஐபோன் 12 சீரிஸ் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.



இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் சில்லறை வியாபாரத்தை பிரத்யேக ஆன்லைன் ஸ்டோர் மூலம் துவங்கியது. இதுதவிர ஆப்லைன் ஸ்டோர்களை திறப்பதிலும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து திட்டமிட்டு அதற்கென கவனம் செலுத்தி வருகிறது.

2020 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 93 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. மேலும் டிசம்பர் மாதத்துடன் நிறைவுற்ற காலாண்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது பங்குகளை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது. 
Tags:    

Similar News