ஆன்மிகம்
அகரம் முத்தாலம்மன்

தாடிக்கொம்பு அருகே அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா நிறுத்தம்

Published On 2020-10-20 06:16 GMT   |   Update On 2020-10-20 06:16 GMT
கொரோனா தொற்று பரவல் காரணமாக அகரம் முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்துவதற்கான அம்மன் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இவ்வாறு அம்மனின் உத்தரவு கேட்கப்படாததால் இந்த ஆண்டு திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது.
தாடிக்கொம்பு அருகே அமைந்துள்ள அகரம் முத்தாலம்மன் கோவிலில் பாரம்பரிய வழக்கப்படி மிகவும் விமரிசையாக திருவிழா நடத்தப்படும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் 10-ந்தேதிக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அம்மனின் உத்தரவு கேட்டு திருவிழா நடத்துவது வழக்கமாகும். அவ்வாறு திருவிழா நடத்த அம்மன் உத்தரவு வழங்கினால் ஐப்பசி மாத முதல் திங்கட்கிழமை அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அகரம் முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்துவதற்கான அம்மன் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இவ்வாறு அம்மனின் உத்தரவு கேட்கப்படாததால் இந்த ஆண்டு திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஐப்பசி மாத முதல் திங்கட்கிழமை என்பதால், முத்தாலம்மனின் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதலே கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து சென்றனர்.
Tags:    

Similar News