செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் 136 படுக்கையுடன் தனிவார்டு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

Published On 2021-05-22 08:50 GMT   |   Update On 2021-05-22 08:50 GMT
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகளில் அழைத்து வரப்படும் நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் ஆஸ்பத்திரிக்கு வெளியே மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

சென்னை:

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகளில் அழைத்து வரப்படும் நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் ஆஸ்பத்திரிக்கு வெளியே மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் ஆக்சிஜன் தீர்ந்து விடுவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதை தவிர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் ‘ஜீரோ டிலே வார்டு’ உருவாக்கப்பட்டுள்ளது. 7-வது மாடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வார்டில் ஆக்சிஜன் வசதியுடன் 136 படுக்கைகள் உள்ளன. இந்த புதிய வார்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

ஆம்புலன்சில் அழைத்து வரும் நோயாளிகள் உடனடியாக படுக்கை கிடைக்காததால் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த புதிய வார்டு அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் இனி நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டியதில்லை.

ஆம்புலன்ஸ் வந்ததும் நோயாளிகள் உடனடியாக இநத வார்டில் அனுமதிக்கப் படுவார்கள். அவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்தும் வசதியும் அமைக்கப்பட உள்ளது.

அங்கு காத்திருக்கும் நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை காலியானதும் அங்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரம் இந்த வார்டில் இருக்கும் போதும் மருத்துவர்கள் அவர்களை கண்காணித்து கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News