செய்திகள்
கோவேக்சின் தடுப்பூசி

மேலும் 11.84 லட்சம் தடுப்பூசி இன்று சென்னை வந்தன

Published On 2021-09-09 05:29 GMT   |   Update On 2021-09-09 05:29 GMT
ஓரிரு நாட்களில் இன்னும் கூடுதலாக தடுப்பூசிகளை எதிர்பார்க்கிறோம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் வருகின்ற 12-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது. இதற்காக கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கூடுதல் தடுப்பூசியை எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசு உள்ளது.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசிகள் படிப்படியாக ஒதுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இன்று ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 950 கோவேக்சின் தடுப்பூசிகளும், 10 லட்சத்து 56 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் புனேயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தன.

அங்கிருந்து மாநில கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. ஓரிரு நாட்களில் இன்னும் கூடுதலாக தடுப்பூசிகளை எதிர்பார்க்கிறோம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
Tags:    

Similar News