செய்திகள்
பள்ளி மாணவிகள்

பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வு ‘ஹால் டிக்கெட்' வெளியீடு

Published On 2021-07-31 06:23 GMT   |   Update On 2021-07-31 07:11 GMT
துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை:

அரசு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு துணைத்தேர்வு வருகிற 6-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச்சீட்டு) இன்று காலை வெளியிடப்பட்டது.  ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

துணைத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே +2 தேர்வின் இறுதியான மதிப்பெண்களாகும்.



விண்ணப்ப எண் இல்லாத காரணத்தினால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.


Tags:    

Similar News