ஆன்மிகம்
அழகர் கோவில்

10 மாதத்திற்கு பிறகு கள்ளழகர், ராக்காயி அம்மன் கோவில்களில் அபிஷேகத்திற்கு அனுமதி

Published On 2021-02-08 06:07 GMT   |   Update On 2021-02-08 06:07 GMT
10 மாதத்திற்கு நூபுரகங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய கோவில்களில் அபிஷேகம் செய்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.
அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற நூபுரகங்கை தீர்த்தத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்குள்ள ராக்காயி அம்மன் கோவிலில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய தடைநீடித்தது.

இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் அரசை தொடர்ந்து வலியுறுத்தினர். இதைதொடர்ந்து 10 மாதத்திற்கு நூபுரகங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய கோவில்களில் தேங்காய், பழம், மாலைகள் வைத்து அபிஷேகம் செய்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி இந்த கோவில்களில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தேங்காய் பழங்கள் வைத்து சாமி கும்பிட்டு செல்கின்றனர்.
Tags:    

Similar News