ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் பாதாள பொன்னியம்மன்

பாதாள பொன்னியம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா

Published On 2021-03-08 03:43 GMT   |   Update On 2021-03-08 03:43 GMT
புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாதாள பொன்னியம்மன், அங்காள பரமேஸ்வரி, பேச்சியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா மற்றும் மயான கொள்ளை திருவிழா 13ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாதாள பொன்னியம்மன், அங்காள பரமேஸ்வரி, பேச்சியம்மன் ஆலயத்தில் 20ம் ஆண்டு மாசிமாத மயான கொள்ளை திருவிழா கடந்த 2ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் நாள் தோறும் காலை, மாலை நேரங்களில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகளுடன் வழிபாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இன்று (திங்கட்கிழமை) இரவு ரிஷப வாகனத்தில் அம்மையப்பர் புறப்பாடும், 11ந்தேதி (வியாழக்கிழமை) இரவு அன்னபூரணி அவதாரத்தில் சிவனுக்கு அன்னம் வழங்குதலும் நடக்கிறது.

12-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி குறைகூடை ஏந்தி வீதி உலாவும், மாலை 6 மணிக்கு நிஷாஷனி குடல் கிழித்து குடல் மாலை அணிந்து வள்ளாலங்கோட்டை அழித்தலுடன் அம்மன் வீதி உலா நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா மற்றும் மயான கொள்ளை திருவிழா 13ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. மாலை 3 மணிக்கு தேர் திருவிழாவும், இரவு 8 மணிக்கு தேங்காய் திட்டு மரப்பாலம் சுடுகாட்டில் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும் நடக்கிறது.14ந்தேதி(ஞாயிறு) இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
Tags:    

Similar News