செய்திகள்
கோப்புப்படம்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிவதால் கொரோனா பரவும் அபாயம்

Published On 2021-07-20 11:06 GMT   |   Update On 2021-07-20 11:06 GMT
கொரோனா பரவலால் கடந்த சில மாதங்களாக குறைகேட்பு கூட்டம் நடைபெறவில்லை.
திருப்பூர்:

கொரோனா பரவலால் கடந்த சில மாதங்களாக குறைகேட்பு கூட்டம் நடைபெறவில்லை. 

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை  மக்கள்குறைகேட்பு கூட்டம் நடைபெறும். கொரோனா பரவலால் கடந்த சில மாதங்களாக குறைகேட்பு கூட்டம் நடைபெறவில்லை. 

இருப்பினும் பொதுமக்கள் அத்தியாவசிய பிரச்சினைகளை தெரிவிக்க மனுக்கள் பெட்டி வைத்து மனுக்கள் பெறப்படுகின்றன. 

இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதனால் வளாகம் முழுவதும் பரபரப்பாக இருந்தது. 

கொரோனா பாதிப்பு காரணமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள்  முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், சானிடைசரால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.  

ஆனால் தற்போது பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளதால் விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.  இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.

எனவே தொலைபேசி வாயிலாக, பொதுமக்கள் கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News