லைஃப்ஸ்டைல்
நின்ற நிலையில் செய்யும் பாதஹஸ்தாசனம்

நின்ற நிலையில் செய்யும் பாதஹஸ்தாசனம்

Published On 2021-11-30 02:25 GMT   |   Update On 2021-11-30 02:25 GMT
இந்த ஆசனம் செய்து வந்தால் வயிற்று உள் உறுப்புகள் நன்கு இயங்கும். முதுகுவலி வராது. முதுகுத்தண்டு திடப்படும். அதிக எடை, தொப்பை குறையும்.

செய்முறை: விரிப்பில் இரு கால்களையும் சேர்த்து நேராக நிற்கவும் கைகளை தலைக்குமேல் உயர்த்தி மூச்சை வெளிவிட்டு மெதுவாகக் குனிந்து கால் பெருவிரல்களை தொடவும். அங்கு சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் இருக்கவும். பின் பொறுமையாக நிமிர்ந்து வரவும், இதுபோல் இரண்டு முறைகள் செய்யவும்.

பாதஹஸ்த ஆசனத்தின் பலன்கள்: வயிற்று உள் உறுப்புகள் நன்கு இயங்கும். முதுகு வலி வராது. முதுகுத்தண்டு திடப்படும். அதிக எடை, தொப்பை குறையும். தசைகள் குளிர்காலம், மழைக்காலத்தில் தாங்கக்கூடிய சக்தியை பெறுகின்றது.

மேற்குறிப்பிட்ட நான்கு ஆசனங்களை தினமும் காலை / மாலை பயிற்சி செய்தால் குளிர் காலத்தில் வரும் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகும். அதோடு சேர்த்து நுரையீரலை வலுப்படுத்தும் எளிய நாடிசுத்தியை செய்ய வேண்டும்.

யோகக் கலைமாமணி
பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440
Tags:    

Similar News