தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங்

இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் ரெண்டர்கள்

Published On 2021-12-31 10:47 GMT   |   Update On 2021-12-31 10:47 GMT
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.


சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், கேலக்ஸி எஸ்22 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல்களின் புதிய ரெண்டர்கள் தற்போது வெளியாகி உள்ளன.

புதிய ரெண்டர்களின் படி கேலக்ஸி எஸ்22 மாடலில் பன்ச் ஹோல் ரக ஃபிளாட் டிஸ்ப்ளே, மெட்டல் சேசிஸ், வலதுபுறத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன. இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள், சாம்சங் லோகோ இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன், பின்க் கோல்டு, பேண்டம் பிளாக் மற்றும் பேண்டம் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.



கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் பர்கண்டி, கிரீன், பேண்டம் பிளாக் மற்றும் பேண்டம் வைட் நிறங்களில் உருவாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் எஸ் பென், மெட்டல் பிரேம், நான்கு கேமரா சென்சார்கள், வலதுபுறம் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன.

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் கியூ.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் அமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்.பி. பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News