வழிபாடு
சதுரகிரி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5-ந்தேதி வரை அனுமதி இல்லை

Published On 2021-12-01 04:50 GMT   |   Update On 2021-12-01 07:12 GMT
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு வழக்கமாக அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. வழக்கமாக அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இ்ந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் சதுரகிரி, சாப்டூர் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும், வனத்துறையினர் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில்
சதுரகிரி
சுந்தரமகாலிங்கம் கோவிலில் வழக்கம்போல் நடைபெறக்கூடிய சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெறும் எனவும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News