செய்திகள்
நிர்மலா சீதாராமன்

கொரோனா மருந்துகளுக்கு வரிவிலக்கு: பிரதமருக்கு மம்தா கடிதம்- நிர்மலா சீதாராமன் விளக்கம்

Published On 2021-05-09 13:05 GMT   |   Update On 2021-05-09 13:05 GMT
கொரோனா மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியிருந்தார்.

அதில் மம்தா பானர்ஜி ‘‘பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் ஏஜென்சிகள் மேற்கு வங்காளத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் சேமிப்பு தொட்டிகள் மற்றும் கொரோனா மருந்துகளை வழங்குகின்றன. அவர்களில் பெரும்பாலான நன்கொடையாளர்கள், மாநில அரசை அணுகி, அவர்கள் அனுப்பும் பொருட்களுக்கான சுங்க வரி மற்றும் ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இந்த வரி விதிப்புகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, நன்கொடையாளர்கள் அனுப்பும்  இத்தகைய பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்க வரி மற்றும் பிற வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இந்த கடிதத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். நிர்மலா சீதாராமன் ‘‘கொரோனா நிவாரணத்திற்கான பொருட்கள் இறக்குமதிக்கு ஐஜிஎஸ்டி-யில் விலக்கு அளிக்கப்படும் என்று கடந்த மே 3-ந்தேதியே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சுங்கம் மற்றும் சுகாதார செஸ் வரியில் இருந்து கூட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளவை இதற்குள் அடங்கும். இந்திய செஞ்சிலுவை சங்கம் இறக்குமதி செய்து வினியோகம் செய்ய முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ. 100 ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டால் 50 ரூபாய் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் செல்கிறது. 41 சதவீதம் மாநில முன்னேற்றத்திற்கு மத்திய ஜிஎஸ்டி-க்கு செல்கிறது. ஆகவே, 100 ரூபாய் வசூலித்தால், 70.50 ரூபாய் மாநிலங்களுக்குத்தான் செல்கிறது.



தடுப்பூசிகளுக்கு 5 சதவீதம், கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் (கொரோனா மருந்து, ஆக்சிஜன் செறிவூட்டிகள்) ஆகியவற்றிற்கு 12 சதவீத ஜிஎஸ்டி உள்நாட்டு சப்ளைக்கு பொருந்தும். மேலும் வணிக ரீதியிலான இறக்குமதிக்கும் பொருந்தும்.

கொரோனா தடுப்பூசி 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கும், அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. அரசு வினியோகம் செய்வதுடன், ஜிஎஸ்டியும் செலுத்துகிறது’’ என்றார்.
Tags:    

Similar News