செய்திகள்
கோப்புபடம்

உடுமலை போலீஸ் நிலையத்தை இரண்டாக பிரிக்க நடவடிக்கை - டி.ஐ.ஜி., தகவல்

Published On 2021-10-24 04:06 GMT   |   Update On 2021-10-24 04:06 GMT
கணியூர் மற்றும் குமரலிங்கம் போலீஸ் நிலையங்களிலும் டி.ஐ.ஜி., ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை சப்-டிவிஷனுக்குட்பட்ட மடத்துக்குளம் போலீஸ் நிலையத்தில் கோவை சரக டி.ஐ.ஜி., முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது டி.எஸ்.பி., தேன்மொழி வேல், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், பயிற்சி டி.எஸ்.பி.,க்கள் மாயவன், ராகவி, பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆய்வில் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. வழக்குகளை விரைந்து முடிக்கவும், இரவு ரோந்துப்பணியை முறையாக மேற்கொண்டு குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள அறிவுறுத்தினார். கணியூர் மற்றும் குமரலிங்கம் போலீஸ் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது டி.ஐ.ஜி., முத்துச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:

மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்தவும், பைக்கில் வந்து பெண்களிடம் நகை பறிக்கும் செயின் பறிப்பு திருடர்களை பிடித்து கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யவும், செயின் பறிப்பு நபர் இரண்டாம் முறையில் குற்றம் செய்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகனங்களில் செல்பவர்களை மறித்து செல்போன் பறிக்கும் சம்பவத்தில் ஒரே வழக்காக பதிவு செய்யாமல் ஒவ்வொருவரிடமும் புகார் பெற்று தனித்தனி வழக்காக பதிவு செய்து கடும் தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்.

உடுமலை போலீஸ் நிலைய எல்லை மற்றும் குற்ற வழக்கு பதிவு மற்றும் விசாரணை அடிப்படையில் உரிய முன்மொழிவு பெற்று இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டி.ஐ.ஜி., தெரிவித்தார்
Tags:    

Similar News