செய்திகள்
கோப்புபடம்

நாணப்பரப்பு பிரிவு சாலை அருகே காரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது - தலைமறைவாக இருந்தவரும் சிக்கினார்

Published On 2021-06-11 16:26 GMT   |   Update On 2021-06-11 16:26 GMT
நாணப்பரப்பு பிரிவு சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, காரில் சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மற்றொரு வழக்கில் தலைமறைவாக இருந்தவரும் சிக்கினார்.
நொய்யல்:

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் நேற்று சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாணப்பரப்பு பிரிவு சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 4 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் கள்ளச்சாராயம் கடத்தியதாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீரணம் பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35). கரூர் மாவட்டம் புகளூர் கொங்கு நகரைச்சேர்ந்த முருகேசன் (40) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் அதனை கடத்தி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 6-ந்தேதி கிழக்கு தவுட்டுப் பாளையத்தில் உள்ள காவிரி படுகையில் 500 லிட்டர் சாராய ஊறல் போட்டது சம்பந்தமாக 2 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

இதில், தலைமறைவாக இருந்த கிழக்கு தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த சசிகுமார் (35) என்பவரை நேற்று வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News