தமிழ்நாடு
படகு போக்குவரத்தை துவக்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.

மக்கள் ஆற்றை கடப்பதற்கு சொந்த செலவில் படகு வாங்கி கொடுத்த விஜய் வசந்த் எம்.பி.

Published On 2022-01-24 11:32 GMT   |   Update On 2022-01-24 11:32 GMT
தந்தையின் வழியை பின்பற்றி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதில் பெருமிதம் கொள்வதாக விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஊராட்சி ஒன்றியம் விளாத்துறை பஞ்சாயத்துக்கு உட்பட விளாத்திவிளை பகுதியில் பொதுமக்கள் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்வதற்காக, விஜய் வசந்த் எம்.பி. படகு வாங்கி கொடுத்துள்ளார். 

இந்நிகழ்ச்சிக்கு விளாத்துறை துறை காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார். முன்சிறை கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பால்ராஜ், கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரமோகன் டேவிட், விளவங்கோடு ஊராட்சி தலைவர் திருமதி.லைலா ரவிசங்கர், முன்சிறை வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி முத்துமலர், விளாத்துறை ஊராட்சி மகிளா காங்கிரஸ் தலைவி அனிதா, வர்த்தக காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ஆமோஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்சிறை வட்டார காங்கிரஸ் துணை தலைவர் விஜயராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சந்திரமோகன் நன்றி கூறினார்.



இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. கூறியதாவது:-

நான் ஒரு மழைக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஊராட்சி ஒன்றியம் விளாத்துறை பஞ்சாயத்துக்கு உட்பட விளாத்திவிளை பகுதியில் சென்ற போது ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதை பார்த்தேன். "இங்கிருந்த பழைய படகு நாசமாகி விட்டது" என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் என்னிடம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், எனது சொந்த செலவில் படகு ஒன்றை வாங்கி அர்ப்பணித்து படகுப் போக்குவரத்தை துவக்கி வைத்தேன். 

எனது தந்தை கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என நினைத்தார். தந்தையின் வழியை பின்பற்றி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.  அதனடிப்படையில் இந்த புதிய படகை நான்  வாங்கி அர்ப்பணித்துள்ளேன். விரைவில் இந்த பகுதியில் மேம்பாலம் அல்லது சப்பாத்து பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News