ஆட்டோமொபைல்
எரிக் பேட்டரி ஆட்டோ

ஷடோ நிறுவனத்தின் ‘எரிக்’ பேட்டரி ஆட்டோ அறிமுகம்

Published On 2019-08-30 06:19 GMT   |   Update On 2019-08-30 06:19 GMT
ஷடோ குழும நிறுவனம் ‘எரிக்’ என்ற பெயரில் பேட்டரி ஆட்டோக்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 2 மாடல்களில் வந்துள்ளன.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஷடோ குழும நிறுவனம் பேட்டரி தொழில்நுட்ப வாகனங்களை தயாரிப்பது, சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது உள்ளிட்ட தொழில்களில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் பேட்டரியில் ஓடும் ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது. உடனடியாக சார்ஜ் ஏறும் வகையிலான இந்த ஆட்டோவை குழுமத்தின் அங்கமான அடாரின் என்ஜினீயரிங் டெக்னாலஜீஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

இந்த ஆட்டோ ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கி.மீ தூரம் வரை செல்லும். ‘எரிக்’ என்ற பெயரில் இந்த பேட்டரி ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை 2 மாடல்களில் வந்துள்ளன. ஒன்று சரக்கு போக்குவரத்துக்கானது. மற்றொன்று பயணிகள் மாடலாகும். சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும்போது இத்தகைய பேட்டரி ஆட்டோக்களுக்கான தேவையும் அதிகரிக்கும்.
Tags:    

Similar News