தோஷ பரிகாரங்கள்
பல்லி நமது உடலில் விழுந்தால் ஏற்படும் தோஷத்திற்கு என்ன பரிகாரம்

பல்லி நமது உடலில் விழுந்தால் ஏற்படும் தோஷத்திற்கு என்ன பரிகாரம்

Published On 2022-04-02 07:40 GMT   |   Update On 2022-04-02 07:40 GMT
நமது வாழ்வியல் சாஸ்திரத்தில் பல்லி மிக முக்கிய பங்காற்றுகிறது. பல்லி நமது உடலில் விழுந்தால் ஏற்படும் தோஷங்களுக்கு என்னென்ன பரிகாரங்கள் உள்ளன என்பன பற்றி பார்க்கலாம் வாங்க...
நமது வாழ்வியல் சாஸ்திரத்தில் பல்லி மிக முக்கிய பங்காற்றுகிறது. பல்லி விழும் பலன்கள் என்பது பண்டைய நாள்தொட்டே நடைமுறையில் உள்ளது. இதனை பஞ்சாங்கத்தில் புகுத்தி பலன்களாக தந்திருக்கிறார்கள். காக்கை நம் வீட்டின் முன் வந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள் என்பது ஐதீகம்.  காக்கைக்கு உணவு வைப்பது நம் முன்னோருக்கு உணவு அளிப்பதற்கு சமம், போன்ற பல சாஸ்திர விதிகள் உள்ளன.

அது போல எல்லோருடைய வீட்டிலும் இருக்ககூடிய பல்லியில் சில சாஸ்திரங்கள் உள்ளன. பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பல்லி நமது உடலில் விழுந்தால் ஏற்படும் தோஷங்களுக்கு என்னென்ன பரிகாரங்கள் உள்ளன என்பன பற்றி பார்க்கலாம் வாங்க...

உடலின் எந்த பாகத்தின் மீது பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள். குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை வழிபட்டு பல்லி விழுந்ததால் எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள்.

இல்லையெனில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்கினால் பல்லி விழுந்த தோஷங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News