ஆன்மிகம்
பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பஞ்சாட்சர வடிவிலான சங்குகளை படத்தில் காணலாம்.

பட்டிவீரன்பட்டிஜோதி லிங்கேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

Published On 2020-12-15 06:47 GMT   |   Update On 2020-12-15 06:47 GMT
பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 5-வது சோம வாரத்தையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 5-வது சோம வாரத்தையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் பஞ்சாட்சர வடிவில் 108 சங்குகள் வைக்கப்பட்டு அந்த சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் அந்த சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஜோதிலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 5-வது சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேக விழா நடந்தது. இதையொட்டி மூலவரான கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், பு‌‌ஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக கோவில் வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 1008 சங்குகள் வைக்கப்பட்டது. பின்னர் அவற்றில் புனிதநீர் ஊற்றப்பட்டு யாகசாலை பூஜை செய்யப்பட்டது. அதையடுத்து கைலாசநாதருக்கு சங்காபிஷேகம் நடந்தது. இதில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News