செய்திகள்
கோப்புபடம்

பேரூராட்சி ஒப்பந்த பெண் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-12 18:18 GMT   |   Update On 2021-09-12 18:18 GMT
குத்தாலத்தில் தற்கொலை செய்து கொண்ட பேரூராட்சி ஒப்பந்த பெண் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி நகையில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை அவுரி திடலில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி தூய்மை பணி பரப்புரையாளர் எழிலரசி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி முன்னிலை வகித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட ஒப்பந்த தூய்மை பணி பரப்புரையாளர் நதியாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

பணி நீக்கம் செய்த அலுவலரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் துப்புரவு பணி பரப்புரையாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
Tags:    

Similar News