செய்திகள்
கோப்புபடம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கால்வாய்களில் தூய்மைப் பணிகள் தீவிரம்

Published On 2021-09-22 04:09 GMT   |   Update On 2021-09-22 04:09 GMT
நகராட்சியிலுள்ள வார்டுகளை 6 மண்டலமாக பிரித்து பொறுப்பு அலுவலர்கள் நியமிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
உடுமலை: 

வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் மழை நீர் முறையாக செல்லும் வகையிலும் குடியிருப்பு மற்றும் ரோடுகளில் பாய்ந்து சேதம் ஏற்படுத்தாத வகையில் கால்வாய்களை முறையாக தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 1,506 கி.மீ., நீளமுள்ள சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 1,500 பேர் ஈடுபட்டுள்ளனர். 

தலா 10 வார்டுகள் கொண்ட 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஊழியர்கள் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். எந்திரங்கள், வாகனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திறந்த மற்றும் மூடி அமைக்கப்பட்ட கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பை கழிவுகள், மண் மேடுகள் ஆகியவற்றை முழுமையாக அகற்றி, பிளீச்சிங் பவுடர் போடுதுல், கொசு மருந்து தெளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. 

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் விநாயகம் கூறியதாவது: 

வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் இடர்பாடுகள், பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மழைநீர் வடிகால்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பல்லடம் நகராட்சி 18 வார்டிலும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம் தொடங்கி செப்டம்பர் 25-ந்தேதி வரை நடக்கிறது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வார்டு தோறும் உள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ள உள்ளனர். 

எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்களை கொண்ட தனி குழு அமைத்து மழை நீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் நடக்கிறது. 
Tags:    

Similar News