ஆட்டோமொபைல்
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 டீசர் வெளியீடு

Published On 2020-04-25 10:35 GMT   |   Update On 2020-04-25 10:35 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



மஹிந்திரா நிறுவனத்தின் பிஎஸ்6 அல்டுராஸ் ஜி4 எஸ்யுவி மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த கார் பலமுறை இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய பிஎஸ்6 அல்டுராஸ் ஜி4 மாடலின் டீசர் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட என்ஜினுடன் சிறு மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது.



தற்போதைய பிஎஸ்4 மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 180 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பிஎஸ்6 மாடலிலும் இதே என்ஜின் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் சங்யொங் ரெக்ஸ்டன் மாடலுக்கு இணையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய அலாய் வீல் வடிவமைப்பு சோதனை செய்யப்பட்ட மாடல்களில் பலமுறை காணப்பட்டது.
Tags:    

Similar News