தொழில்நுட்பம்

அவெஞ்சர்ஸ் ஸ்டைலில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-04-25 09:39 GMT   |   Update On 2019-04-25 09:39 GMT
ஒப்போ நிறுவனம் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷனை அறிமுகம் செய்தது. #OPPO



ஒப்போ நிறுவனம் எஃப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் புளு நிறத்தில் கிளாஸி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிரேடியன்ட் எஃபெக்ட்கள் மற்றும் அவெஞ்சர்ஸ் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.



ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேப்டன் அமெரிக்காவை தழுவிய கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த கேஸ் கேப்டன் அமெரிக்காவின் ஷீல்டு போன்ற உருவம் கொண்டிருக்கிறது. இதனை போனின் ஹோல்டர் போன்று  பயன்படுத்திக் கொள்ளலாம். 

இத்துடன் மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் பெட்டியில் அவெஞ்சர்ஸ் சின்னம், ஸ்டேம்ப்டு பேட்ஜ் மற்றும் சிறப்பு பரிசு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்11 ப்ரோ மாடலில் 6.5 இன்ச் FHD+  பானரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0, இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ எஃப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் 128 ஜி.பி. மாடல் விலை 1399 மலேசியன் ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.23,665) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News