செய்திகள்
குடிபோதையில் இருந்த ஆசிரியரை காணலாம்

குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்

Published On 2021-10-21 04:28 GMT   |   Update On 2021-10-21 04:28 GMT
பள்ளிக்கு குடிபோதையில் வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில்வாசா:

யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹைவேலியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தாத்ராநகர் ஹைவேலி கான்வெல் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மராத்தி மொழி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சந்தீப் தேசாலே. இவர் நேற்று 9-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பாடம் எடுக்க வகுப்பறைக்கு சென்றார்.

அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மாணவர்கள் ஆசிரியர் குடிபோதையில் வந்து இருப்பது தெரியவந்தது. மேலும் ஆசிரியர் சந்தீப் தேசாலே குடிபோதையில் ஆபாசமான வார்த்தைகளால் மாணவர்களை திட்டி உள்ளார். இதனை ஒரு மாணவர் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர் இந்த வீடியோவை மாணவர் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரப்பி விட்டார்.

இது பற்றி அறிந்த கல்வித்துறை அதிகாரி ஷோ காஸ் உடனடியாக ஆசிரியர் சந்தீப் தேசாலேவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கு குடிபோதையில் வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News