உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கொரோனா தடுப்பு வழிகளை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்-மருத்துவக்கல்லூரி டீன் அறிவுறுத்தல்

Published On 2021-12-04 09:21 GMT   |   Update On 2021-12-04 09:21 GMT
தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

கர்நாடகாவில் இருவருக்கு ‘ஒமைக்ரான்’ உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகம் முழுதும் தலைமை அரசு மருத்துவமனைகளில் ‘சிறப்பு தனிமைப்படுத்துதல் கண்காணிப்பு வார்டு’ ஏற்படுத்த மருத்துவத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் 24 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இந்த வார்டில் அனுமதிக்கப்படுபவர் 24 மணி நேரமும் தொடர்ந்து மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருப்பார். 

தேவைப்பட்டால் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப்படும். அனைத்து படுக்கைக்கு தேவையான ஆக்சிஜன் உடனுக்குடன் பிரத்யேகமாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிநவீன ஸ்கேன், எக்ஸ்ரே வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி ‘டீன்’ முருகேசன் கூறியதாவது:-

தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவையான முன்னேற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு டாக்டர், செவிலியர் மற்றும் குழுவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல், அடிக்கடி கை கழுவுதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவற்றை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.  
Tags:    

Similar News