செய்திகள்
சுதந்திர தினவிழா கலைநிகழ்ச்சியில் படுகர் இன மக்களுடன் சேர்ந்து நடனமாடிய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

சுதந்திர தின விழாவில் படுகர் இன மக்களுடன் நடனமாடிய நீலகிரி கலெக்டர்

Published On 2021-08-15 10:18 GMT   |   Update On 2021-08-15 10:18 GMT
ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கலெக்டர் கவுரவித்தார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்று கொண்டார்.

பின்னர் விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

அதனை தொடர்ந்து விழாவில் கோத்தர், படுகர், தோடர் இன மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அவர்கள் தங்களுடைய பாரம்பரிய உடை அணிந்து, பாடல்களின் இசைக்கு ஏற்றவாறு நடனமாடினர். இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.

படுகர் இன பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது விழா மேடையில் இருந்து கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்து கொண்டிருந்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கீழே இறங்கி வந்து, படுகர் இன பெண்களுடன் சேர்ந்து நடமானடினார்.

கலெக்டர் படுகர் இன பெண்களுடன் சேர்ந்து நடனமாடியதை அங்கிருந்த அனைவருடன் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News