செய்திகள்
திமுக

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Published On 2020-12-02 09:07 GMT   |   Update On 2020-12-02 09:07 GMT
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணி அளவில் காணொலி வாயிலாக நடைபெறும்.

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பேச நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News