ஆன்மிகம்
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவில் விழா

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவில் விழா

Published On 2021-08-16 07:28 GMT   |   Update On 2021-08-16 07:28 GMT
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பாலநாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடந்தது.
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பாலநாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடந்தது. சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து முப்பெரும் தேவியருக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து வளைகாப்பு அணியும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு 21 வகையான சிறப்பு வளைகாப்பு சாதமும் படைக்கப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, செங்காளியம்மனுக்கும் வளைகாப்பு பூட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் பங்கேற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெண்களுக்கு வளையல்கள், மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News