ஆன்மிகம்
இயேசு

சிலுவையின் மேன்மையான அழைப்பு

Published On 2021-04-16 03:07 GMT   |   Update On 2021-04-16 03:07 GMT
சிலுவை சுமந்த இயேசுவின் பாடு மரங்களை குறித்து தியானிக்கும் இந்த நாட்களில் அந்த சிலுவையிலிருந்து இம்மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலை கேட்க்க நம் செவிகளை சாய்ப்பது நன்மை தரும்.
அன்பான சகோதர சகோதரிகளுக்கு நமக்காய் மரித்து உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். சிலுவை சுமந்த இயேசுவின் பாடு மரங்களை குறித்து தியானிக்கும் இந்த நாட்களில் அந்த சிலுவையிலிருந்து இம்மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலை கேட்க்க நம் செவிகளை சாய்ப்பது நன்மை தரும். இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்றார்[மத்தேயு:16:24].

சிலுவை என்பது கிறிஸ்துவின் பாடுமரணத்தை நினைவுட்டும் இரட்சிப்பின் சின்னமாக  இருந்தாலும் மறுபுறம்  கிறிஸ்துவின்  அன்பின், மன்னிப்பின், கிருபையின், மகிமையின் சின்னமாய் நம்மை மகிழ்விக்கிறது. தேவன் தம்முடைய ஒரே குமாரனை இந்த உலகத்தில் அனுப்பி நம் எல்லாரையும் இவவசமாய் மீட்டு இரட்சித்தார். நம்முடைய இரட்சிப்பிற்காக கிறிஸ்து இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தை விலைக்கிரயமாய் கொடுத்து சிலுவையில் தொங்கினார். இந்த சிலுவை நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மேன்மையான அழைப்பை கொடுக்கிறது. “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்கிற அழைப்பின் குரலே அது.

ஆம் அன்பானவர்களே நமக்காக சிலுவை சுமந்த இயேசு இந்த மேலான அழைப்பை எல்லா மனிதருக்கும் இலவசமாய் விடுக்கிறார். இரட்சிப்போடு இணைந்தது தான் சிலுவையின்  அழைப்பும். இரட்சிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இந்த அழைப்புக்கு பாத்திரவான்கள். அந்த மேன்மையான அழைப்பை உணர்ந்து நாமும் அவரை பின்பற்ற வேதம் நமக்கு சொல்லும் ஆலோசனைகளை சிந்திப்போம்.
Tags:    

Similar News